Tamilibc.Com
எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய தமிழ் ஐ.பி.சி செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow IBC" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
 • virakesari.tv
 • Facebook
 • YouTube
 • RSS feed
 • Follow us on Twitter
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

7 வருட இரகசியம் வெளியாகிறது! பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை!

Posted by Tamil Ibc | Friday, October 21, 2016 | Posted in , , ,

கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் கடந்த விட்ட போதிலும் விடுதலை புலிகளின் தலைவரின் மரணம் என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது.
சமீபத்தில் கமால் குணரத்ன ஆரம்பித்து முதல் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. பிரபாகரன் மரணம் தொடர்பாக மகிந்தா ராஜபக்சே, பொன்சேகா, கோத்தபயா அனைவருமே பின்வாங்க முயலும் கருத்துகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதனையும் தாண்டி தற்போது பசில் ராஜபக்சே கூறியுள்ள கருத்து பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதாவது விடுதலை புலிகளின் தலைவர் இறக்கவில்லை என்பதை வலுப்படுத்தும் விதமாக கருத்து ஒன்றை பசில் முன் வைத்துள்ளார்.
 பிரபாகரன், இறக்கவில்லை,கமால் குணரத்ன

கடந்த ஆட்சியில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனாலும் தற்போது அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என பசில் கூறி உள்ளார். பிரபாகரன் மரண சான்றிதழ் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த போதும் அது தொடர்பாக கடந்த ஆட்சியாளர்கள் எந்த கருத்தையும் கூறவில்லை.
அதே வேளை, இதுவரையிலும் வெளிப்படுத்தப்படாத இரகசியம் தற்போது வெளிப்படுத்த முயற்சி நடக்கிறது. அது மட்டும் அல்லாமல் 7 ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த இலங்கையின் ரகசியத்தை தற்போது வெளிப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போதைய ஆட்சிக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

யாழ். சம்பவம் – மைத்திரியும் சம்பந்தனும் நேரில் சந்திப்பு!

Posted by Tamil Ibc | | Posted in ,

யாழ். நகரில் இரு இளைஞர்களின் மரணம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது கவலையை தெரிவித்ததோடு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ்விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இரா. சம்பந்தன் பொலிஸ்மா அதிபரோடு தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

வாட்டர் பாட்டிலுடன் உறவுக் கொண்ட ஆண், உறுப்பு துண்டிக்கப்பட்டது!

Posted by Tamil Ibc | | Posted in , ,

மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளினால் கூட இச்சை என்னத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால், மனிதன் விலங்காக மாறும் தருணம் என ஒன்றிருக்கிறது. விலங்குகள் அதன் இனப்பெருக்க காலத்தில் மட்டும் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடும்.
ஆனால், மனிதர்கள் கட்டுப்பாடு இழந்து வெளிய சொல்ல முடியாத வகைகளில் எல்லாம் உடலுறவில் ஈடுபட முனைகின்றனர். அப்படி ஒரு 50 வயது மிக்க ஆண் ஒருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்தி உடலுறவில் ஈடுபட முயன்று நன்கு நாள் அவதிக்கு பிறகு ஆணுறுப்பை இழந்தே விட்டார்.
இப்படியுமா ஒரு நபர் முயற்சிப்பார்… மாட்டிக் கொண்டது! மனைவி மற்றும் பெண் தோழிகளே இல்லாத 50 வயது மிக்க ஆண் இருவர் வாட்டர் பாட்டிலை செக்ஸ் டாயாக பயன்படுத்த முயன்றுள்ளார். விறைப்பு அடைந்த நிலையில் வாட்டர் பாட்டிலுடன் உறவில் ஈடுபட முயன்ற தருணத்தில் இவரது ஆண்குறி பாட்டிலில் மாட்டிக் கொண்டது.
உறவுக் கொண்ட ஆண்

அவமானம்! அவமானம்! இதை எப்படி வெளியே சொல்வது, யாரிடம் உதவி கேட்பது, மருத்துவமனைக்கு இதே நிலையில் சென்றால் அவமானமாக இருக்கும் என்ற அச்சத்தில் வெளியே யாரிடமும் கூறவில்லை.
நான்கு நாட்கள்! நாளுக்கு நாள் இவரது ஆண்குறியின் தன்மை மாற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட முழுமையாக கருப்பாகி போன நிலையில் இவரது ஆண்குறி மாறிவிட்டது. அந்த அந்த சமயத்தில் தான் இவரது மகன் இவரை கண்டுள்ளார்.
பிறகு, மகன் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்,. அழுகியது! அழுகியது! கிட்டத்தட்ட அந்த 50 வயது மிக்க ஆணின் ஆண் குறி அழுகிவிட்டது. பிறகு வேறு எந்த வழியும் இல்லாததால், மருத்துவர்கள் அவரது ஆண்குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். விபரீத விளையாட்டு, வில்லங்கமான முடிவில் போய் முடிந்துவிட்டது.
சிறுநீர் கழிக்க மட்டும் வழி! சிறுநீர் கழிக்க மட்டும் வழி! மருத்துவர்கள் முயற்சியால், இப்போது இவர் சிறுநீர் கழிக்க மட்டும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவரால் உடலுறவில் இனிமேல் ஈடுபட முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
மருத்துவரின் காணொளிப்பதிவு! அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இந்த சம்பவம் குறித்து கூறும் காணொளிப்பதிவு..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம

Posted by Tamil Ibc | | Posted in ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
”ஆறு ஏழு தலைமுறையாய் மாடாய் நாம் உழைத்து  கூட சொந்த காணியில்லை”, “திண்று கொழுக்கும் திமிங்கலங்கள் கூட்டு சேர்ந்து  கொள்கை வகுக்கும்“, “எவனெவனோ  சொகுசா வாழ எங்கள் உயிரை இங்கு மாய்த்தோம்“ என்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோசங்களை எழுப்பியுள்ளனர்.
அவர்கள் கைகளில் மும்மொழிகளில் எழுதப்பட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டமமேக்கப் போட்டு ஏமாற்றிய மனைவி: விவாகரத்து செய்த கணவர்

Posted by Tamil Ibc | | Posted in ,

துபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என்று விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார்.
 
துபாயில் புதிதாக திருமணமான நபர், தனது மனைவியுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். குளித்திட்டு வந்த மனைவியின் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
அளவு அதிகமாக மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தற்போது உண்மையான முகத்தை கண்டு அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்று மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
மேக்கப் , மனைவி , கணவன் , விவாகரத்து , துபாய் , Wife , Husband , Diovorce , Dubai , Make Up

 
இதில் மனமுடைந்த அந்த பெண் உளவியல் மருத்துவரை அனுகியுள்ளார். இதுகுறித்து அந்த மருத்துவர் கூறியதாவது:-
 
அந்த பெண் திருமணத்திற்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துள்ளார். மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது, என்று கூறியுள்ளார்.

அவிழ்ந்தது ‘பெர்முடா முக்கோணத்தின்’ மர்ம முடிச்சு

Posted by Tamil Ibc | | Posted in , ,

அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள்.

இந்த பெர்முடா முக்கோணமானது புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் கடல் பகுதியாகும். இந்த கடல்பகுதி 5 லட்சம் கிலோமீட்டர் சதுரடி பரப்பளவு கொண்டது ஆகும்.
 
இந்த முக்கோணக் கடல்பகுதியில் எண்ணற்ற கப்பல்கள் மர்மமான முறையில் மறைந்து போயுள்ளன. ஆனால், இது குறித்த உண்மை நிலவரம் எவருக்கும் தெரியாததால், ஏலியன்ஸ் என்பன உள்ளிட்ட மர்ம கதைகள் உலவ ஆரம்பித்தன. இதனால், இதை பேய் முக்கோணம் என்று லத்தீன் அமெரிக்காவில் அழைக்க ஆரம்பித்தார்கள்.
 
இதற்கிடையில், மெக்ஸிகோவின் ஆறு பிளைட் 19 விமானங்கள் காணாமல்போனதும். அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் சென்ற 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.
பெர்முடா முக்கோணம், மர்ம பகுதி, கப்பல்கள், விமானங்கள், மூழ்கடிப்பு, Ships, Aircraft, Drowning, Mystery Area, Bermuda Triangle


இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில் நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர்.
 
இது குறித்து ஸ்டீவ் மில்லர் என்ற கொலராடோ பல்கலைக்கழகத்தின் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் கூறுகையில், “பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பெரும்பாலான நேரம் மேகங்கள் சீரற்ற நிலையில் பரவி இருக்கும்.
 
ரேடார் செயற்கைக் கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் என்ன நடக்கிறது என ஆய்வு செய்யபட்டது. அப்போது கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படும் காற்று வெடி வெடிகுண்டுகள், [Air bombs] போல் கடல் மட்டத்தில் இருந்து மேல் எழும்பி மீண்டும் கடலை நோக்கி கீழே விழுகிறது” என்றார்.
 
எனவே, இந்த காற்று வெடிகுண்டுகளால்தான் அப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சுவிஸ் இலங்கை ஒப்பந்தம் - உண்மையில் நாடுகடத்தப்படுவார்களா தமிழர்கள்..?

Posted by Tamil Ibc | Thursday, October 20, 2016 | Posted in , ,

ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகள் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்திடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். 1980ஆம் ஆண்டுகளின் பின்னரே இலங்கையிலிருந்து தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் குடியேற ஆரம்பித்தனர்.
இவர்கள் பின்வரும் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் வாழ்கின்றனர்.
சுவிஸ், இலங்கை, ஒப்பந்தம், swiss, tamil, swiss_tamilar

1. சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்கள்.
2. சுவிட்சர்லாந்து நிரந்தர வதிவுரிமை பெற்றவர்கள் ( C.அனுமதி என அழைக்கப்படுகிறது)
3. சுவிட்சர்லாந்து தற்காலிக வதிவுரிமை பெற்றவர்கள் ( B.அனுமதி என அழைக்கப்படுகிறது.
4. சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும் சுவிஸில் தங்கியிருந்து வேலை செய்வதற்கான அனுமதி ( F.அட்டை என அழைக்கப்படுகிறது.)
5. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும், அகதி தஞ்ச கோரிக்கை பற்றிய முடிவு கிடைக்காதவர்களும் ( N.அட்டை இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
சுவிட்சர்லாந்திற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அகதிகளை நாடு கடத்துவது என சொல்லவதை விட அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்து பற்றியதே ஆகும்.
சுவிட்சர்லாந்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தாலும் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு வதிவிட உரிமை பெற்றவர்கள் 5ஆயிரத்திற்கு உட்பட்டவர்கள் தான். அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு பி அட்டை எனப்படும் தற்காலிக வதிவிட உரிமை வழங்கப்படும். 5வருடங்களின் பின்னர் சி அட்டை எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும்.
1990ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையிலிருந்து தமிழர்கள் பெருமளவில் சுவிட்சர்லாந்திற்கு அகதிகளாக வருகை தந்தனர். மிகச்சொற்பமானவர்களுக்கு மட்டுமே அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்காலிக வதிவிட உரிமை வழங்கப்பட்டது. பெரும்பாலானவர்களின் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காரணத்தினால் அவர்களுக்கு தற்காலிகமாக தங்கியிருப்பதற்கான எவ் அட்டையே வழங்கப்பட்டது. பின்னர் 10வருடங்களின் பின்னர் அவர்களுக்கு தற்காலிக வதிவிட உரிமை வழங்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று நிரந்தர வதிவிட உரிமை பெற்று அல்லது சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள்.
தற்போது செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தம் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள் மற்றும் தற்காலிக வதிவிட உரிமை பெற்றவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் எவ் அட்டை வழங்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்தில் தொழில் புரிந்து வருபவர்களையும் பாதிக்கப்போவதில்லை.
5ஆவது வகையை சேர்ந்த அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் அகதி தஞ்ச கோரிக்கைக்கு முடிவு கிடைக்காதவர்களையுமே இந்த ஒப்பந்தம் பாதிக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 600பேர் நாடுகடத்தப்பட உள்ளதாகவும் மிகுதியாக உள்ள 4ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சுமார் 5ஆயிரம் பேர் சுவிட்சர்லாந்தில் உள்ளனர் என்றும் சுமார் 1700பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது, நாடு திரும்பும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம், மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான
உதவி, மற்றும் துரிதமாக பிரயாண பத்திரம் அல்லது கடவுச்சீட்டை வழங்குதல் போன்ற விடயங்கள் இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். இவர்கள் பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தாலும் இலங்கையர்களை நாடு கடத்துவதில்லை என சுவிஸ் சமஷ்டி அரசு அறிவித்திருந்தது. நாடு கடத்தப்பட்ட இருவரும் மீண்டும் சுவிஸிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இலங்கையில் அமைதி திரும்பியிருப்பதாகவும் திருப்பி அனுப்படுபவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை இவ்வருடம் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாகவும் அகதிகளாக சுவிட்சர்லாந்தில் குடியேறியிருப்பவர்கள் இலங்கைக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகளை நாடுகடத்தும் வேலையை சுவிட்சர்லாந்து ஆரம்பித்திருந்தது. இந்த வருடத்தில் இதுவரை சுமார் 60பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத கைதுகள் தொடர்பான ஐ.நா.விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் கூட இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவதாகவும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட மனித உரிமை அமைப்புக்கள் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாக பிரசாரம் செய்யப்பட்டாலும் அதில் உண்மை இல்லை என்றும் இன்னமும் கைதுகளும் சித்திரவதைகளும் இடம்பெறுவதாக சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பட்ரிக் வொல்டர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டை சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு திரும்பி அனுப்படுபவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டையும் சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார்.
அகதி தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் தனித்தனியாக பரிசீலிக்கப்படும். அவர்கள் மேன்முறையீடு செய்வதற்கும் கால அவகாசம் வழங்கப்படும், இவை அனைத்தும் முழுமையாக இடம்பெற்ற பின்னர் இலங்கைக்கு அவர்கள் திரும்பி அனுப்படும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதமும் பெற்ற பின்னரே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உண்மையாக உயிர் அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் வழங்கப்படும், கடந்த மேமாதத்தில் கூட ஒருவருக்கு அகதி தஞ்சம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்களின் சொந்த இடமான வடமாகாணத்திற்கும் விஜயம் செய்த சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் அமைச்சர் சிமோனேட்டா வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது அகதிகளை நாடு கடத்துவது தற்போது ஆபத்தானது என்று சுவிஸ் அமைச்சரிடம் தான் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
இந்த உடன்படிக்கையில் நாடு கடத்தப்படுபவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், புனர்வாழ்வு, என்பன உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாடு கடத்தப்படுபவர்கள் விமான நிலையத்திலோ அல்லது அதற்கு பின்னரோ விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியிருப்பதாக சுவிஸ் மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் விஜயத்தின் இறுதியில் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்திக்க இருந்தார். எனினும் இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராசபக்ச, மற்றும் இலங்கை ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஆகியோரை சுவிஸ் நீதி அமைச்சர் சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சுவிஸ் நீதி அமைச்சர் வலியுறுத்தினார் என சுவிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்தி வரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் கொழும்பில் வைத்து சுவிஸ் ஊடகம் ஒன்றிற்கு சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர் தெரித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் 1951ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் சாசனத்தை மீறுவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாத நிலையில் அங்கு வாழும் சிறுபான்மை இனமக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை என்றும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதி பட்ரிக் வொல்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது. வலதுசாரிகள் அகதிகள் நாட்டிற்குள் பெருமளவு உள்வாங்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசிலும் தற்போது வலதுசாரிகளின் கையே ஒங்கியிருக்கிறது. தற்போது நீதியமைச்சராக இருக்கும் சிமோனெட்டா அவர்களும் வலதுசாரி கட்சியை சேர்ந்தவராகும்.
சுவிஸர்லாந்து சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள ஒவ்வொருவரின் விண்ணப்பங்களும் தனித்தனியாக ஆராயப்பட்டே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உண்மையில் இலங்கையில் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா யாரால் அந்த அச்சுறுத்தல் உள்ளது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது நியாயமானதா விரிவாக ஆராய்ந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் இந்த முடிவுகளுக்கு அமைய அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மீது இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி தெளிவு படுத்தியுள்ளார்.
எனினும் சுவிட்சர்லாந்தில் அகதிகளுக்கான கதவு மூடப்படுகிறது என கூறமுடியாது. இலங்கையில் உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லை என்ற போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என சுவிஸ் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படும் சமகாலத்தில் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்த ஒருவருக்கு கடந்த யூலை மாதம் அகதி தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து உட்பட மேற்குலக நாடுகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார நோக்கத்தோடு வருகிறார்கள் என்பதை மேற்குலக நாடுகளின் அதிகாரிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வருபவர்கள் முகவர்களுக்கு 30ஆயிரம் பிறாங்குகளை கொடுத்தே வருகிறார்கள் என சுவிஸ் குடிவரவு அதிகாரியை மேற்கோள் காட்டி சுவிஸில் உள்ள ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.
அகதி தஞ்ச கோரிக்கையை முன்வைப்பவர்கள் பொய்யான தகவல்களையே வழங்கியிருக்கிறார்கள் என்பதை தாம் உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும் அந்த குடிவரவு அதிகாரி தெரிவித்திருந்தார்.
மைத்திரி அரசாங்கம் பதவி ஏற்றபின் புதிய அரசாங்கம் மேற்குலக நாடுகளில் செய்து வரும் பிரசாரங்களின் பலனாகவும் இலங்கை அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விடயத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
ஏற்கனவே 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் பிரித்தானிய அரசாங்கமும் அகதிகளை நாடுகடத்துவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தன. இப்போது சுவிட்சர்லாந்து அது போன்ற ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது.
சுவிட்சர்லாந்தை தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய விளம்பரம்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்

Sign Up to TamilIBC Newsletter

© 2012 Tamilibc All Rights Reserved.
|
Call us on ( +94 ) 9364149